அமெரிக்காவின் அறிவிப்பால் ஆப்கானிஸ்தானில் அதிகரித்த வன்முறை..!
ஆப்கானிஸ்தானிலிருந்து தனது படைகளை திரும்ப பெறுவதாக அமெரிக்கா அறிவித்ததிலிருந்து அங்கு வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தானில் பொதுமக்களை குறிவைத்து தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதும், அவர்களை ஒடுக்க அரசு படைகள் மோதலில் ஈடுபடுவதும் தொடர்கதையாகி வருகிறது. செப்டம்பர் 11ம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள படையினரை முழுவதுமாக திரும்பபெறுவதாக அமெரிக்கா மற்றும் நேட்டோ (NATO) நாடுகள் அறிவித்துள்ளன.
இதனால் ஆப்கானிஸ்தான் அரசுக்கும் தலிபான் அமைப்புக்கும் இடையிலான அமைதி பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் முற்றிலும் vகுறைந்துவிட்டன. கடந்த ஏப்ரல் மாதம் 1,645 பேர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட நிலையில், கடந்த மாதம் இந்த எண்ணிக்கை 4,375ஆக அதிகரித்தது. பயங்கரவாத தாக்குதலில் கடந்த ஏப்ரல் மாதம் 388 பாதுகாப்பு படையினர் உயிரிழந்த நிலையில் கடந்த மாதம் இந்த எண்ணிக்கை 1,134 ஆக அதிகரித்தது.
Comments