இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 60 ஆயிரமாகக் குறைந்தது

0 4018

இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு, கடந்த 75 நாட்களில் இல்லாத அளவுக்கு 60 ஆயிரமாகக் குறைந்துள்ளது.

24 மணி நேரத்தில் 60 ஆயிரத்து 741 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல ஒருநாள் பலி எண்ணிக்கையும் 2 ஆயிரத்து 726 ஆகக் குறைந்துள்ளது. ஒரே நாளில் 1 லட்சத்து 17 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 13 ஆயிரமாகக் குறைந்துள்ளது.

மாநிலவாரியாக தினசரி தொற்று அடிப்படையில், 12 ஆயிரத்து 772 பேருக்கு உறுதி செய்யப்பட்டு தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. 8 ஆயிரத்து 129 பேருக்கு உறுதி செய்யப்பட்டு மகாராஷ்டிரம் இரண்டாமிடத்திலும், 7 ஆயிரத்து 719 பேருக்கு உறுதி செய்யப்பட்டு கேரளம் மூன்றாமிடத்திலும் உள்ளன. நாட்டில் இதுவரை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 26 கோடியை நெருங்குகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments