61 நாட்களுக்குப் பின் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள்... மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைந்ததால் உற்சாகம்

0 3138

மீன்பிடித் தடைக்காலம் முடிந்ததைத் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு சென்னை காசிமேடு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.

மீன்கள் இனப்பெருக்கத்திற்காக தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் கடந்த ஏப்ரல் 15-ம் தேதி மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்பட்டது. 61 நாட்கள் மீன்பிடித் தடைகாலம் திங்கள்கிழமை நள்ளிரவுடன் முடிவுக்கு வந்ததையடுத்து, சென்னை காசிமேடு மீனவர்கள்,இன்று அதிகாலை கடலில் மீன்பிடிக்க புறப்பட்டுச் சென்றனர்.

இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் நிறைடைந்ததைத் தொடர்ந்து விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளதால் மீன்களின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments