இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா வைரஸ் டெல்டா பிளஸ் வைரசாக உருமாற்றம்

0 14044

இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்டு வேகமாகப் பரவி வந்த டெல்டா வகை வைரஸ் தற்போது டெல்டா-பிளஸ் வகையாக உருமாற்றம் பெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிஎஸ்ஐஆர் மரபியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியயல் ஆய்வு நிறுவன மருத்துவ அறிவியல் விஞ்ஞானி வினோத் ஸ்கேரியா  வெளியிட்ட டுவிட்டர் பதிவில், டெல்டா வகை வைரசில் இருந்து இந்த புதிய உருமாறிய வகை உருவாகியிருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த டெல்டா-பிளஸ் வகை வைரஸ் இந்தியாவில் அதிக அளவில் பரவ வில்லை என்றும் ஐரோப்பா, ஆசியா மற்றும் அமெரிக்கா பகுதிகளிலேயே இந்த வகை உருமாற்றம் காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. டெல்டா-பிளஸ் வகை இப்போதுதான் இந்தியாவில் கண்டறியப்பட்டிருப்பதால் இப்போதைக்கு இதனால் ஆபத்தில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments