ஆதார்- பான்கார்டு இணைப்புக்கு வரும் 30ந் தேதி கடைசி நாள்

0 5071

ஆதார் அட்டை மற்றும் பான் அட்டைகளை இணைக்கும் அவகாசம் வருகிற 30 ஆம் தேதியுடன் நிறைவடைவதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வருமானவரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அவ்வாறு இணைக்க தவறினால் பான் எண்ணை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜூலை 1 ஆம் தேதிக்கு பிறகும் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் 1000 ரூபாய் வரை அபராதம் கட்ட நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்களின் முக்கிய பணவழிப் பரிமாற்றம், வங்கி, ஓய்வூதியம்  உள்ளிட்ட பல்வேறு சேவைகள் அனைத்தும் பாதிக்கப்படக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments