"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடக்கம்
தமிழகத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.
வழக்கமாகப் பத்தாம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் பதினொன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெறும். கடந்த ஆண்டு பத்தாம் வகுப்புத் தேர்வு நடத்தவில்லை என்பதால் 2019 - 20 கல்வியாண்டில் ஒன்பதாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
இந்நிலையில் 10ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு வழங்கும் மதிப்பெண் சான்றிதழில் தேர்ச்சி என்று மட்டும் இருக்கும், மதிப்பெண்கள் இருக்காது எனப் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
Comments