அண்ணாசாலையில் சைக்கிளில் வீலிங், அடங்கவே மாட்றானுங்க..! சர்க்கஸ் சாகச புள்ளீங்கோஸ்
ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் சென்னை அண்ணாசாலையில் சைக்கிளில் சென்ற புள்ளிங்கோ சிறுவர்கள் சிலர் ஒற்றை சக்கரத்தில் ஆபத்தான வகையில் வீலிங் சாகசம் செய்தனர்
தமிழகத்தில் ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள அண்ணாசாலையில் சாதரணமாக சைக்கிள் ஓட்டிச்செல்வதே சவாலாக இருக்கும் நிலையில், ஆபத்தை உணராமல் அசால்டாக ஒற்றை வீலில் சைக்கிளை ஓட்டிச் சென்றனர் நம்ம புள்ளீங்கோ பாய்ஸ்..!
தங்களால் வாகன ஓட்டிகளுக்கும், தவறி விழுந்தால் தங்களுக்கும் ஆபத்து ஏற்படும் என்பதை அறியாமல் சர்வ சாதாரணமாக ஒற்றைச் சக்கரதில் சும்மா ஸ்டைலாக சைக்கிளை ஓட்டிச் சென்று வாகன ஓட்டிகளின் கவனத்தை ஈர்த்தனர்
இதுபோன்று அனைத்துவிதமான வாகனங்களும் முண்டியடித்துக் கொண்டும் செல்லும் சாலையில் விபரீதத்தை உணராமல் சர்க்கஸ் திடல் என நினைத்து சைக்கிளில் சாகசங்கள் செய்வது பேராபத்தை ஏற்படுத்தும்
உண்மையில் இது அவர்களின் திறமையான சாகசம், ஆனால் அவர்கள் செய்கின்ற இடம் தான் வில்லங்கமனது, என்பதை அவர்களுக்கு எடுத்துரைத்து காவல்துறையினர் எச்சரித்து அனுப்ப வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் ஆதங்கமாக உள்ளது.
அதே நேரத்தில் சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு வெளியே செல்லும் பிள்ளைகளிடம் பெற்றோர் தக்க அறிவுரை சொல்லி அனுப்ப வேண்டும். பிரேக் இல்லாமல் சாலையில் சாகசம் செய்தால் உடலில் உள்ள எலும்புகளில் சில பிரேக்குகள் ஏற்பட்டுவிடும் என்பதை உணர்ந்தவேண்டியது அவரவர் பெற்றோரின் கடமை..!
Comments