ரேசன் கடைகளில் 2000 ரூபாய் நிவாரணநிதி மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் வினியோகம்

0 3988

கொரோனா பாதிப்பு நிவாரண தொகையின் 2-வது தவணை தொகையான 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு, ரேசன் கடைகளில் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றதும், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்குவதற்கான கோப்பில் கையெழுத்திட்டார்.  இதில் முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் மே மாதம் வழங்கப்பட்டது.

இந்நிலையில், இரண்டாம் தவணையான 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 14 வகை மளிகைப் பொருட்கள் வழங்குவதற்கான கூப்பன்கள் கடந்த 11ந் தேதி முதல் வழங்கப்பட்டன. இந்நிலையில், 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 14 மளிகைப் பொருட்கள் விநியோகம் ரேசன் கடைகளில் தொடங்கியுள்ளது.

சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் காலனி பகுதியில், டோக்கன் கொடுக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் காலை முதலே வரிசையில் நின்று பணம் மற்றும் பொருட்களை வாங்கி சென்றனர். நியாயவிலை கடைக்கு முன்பாக வரிசையில் தனிநபர் விலகளுடன் நிற்பதற்கு வட்டம் வரையப்பட்டுள்ளது. இருந்தபோதும் மக்கள் வரிசையில் நெருக்கமாக நின்றே வாங்கிச் சென்றனர்.

 ஒன்றுக்கு 200 பேர் வரை நிவாரணப் பொருட்களை வாங்கும் வகையில் டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. சென்னை சைதாப்பேட்டை பெருமாள் கோவில் தெருவில் ஒரே இடத்தில் 3 அங்காடிகள் இருந்ததால், நீண்ட வரிசையில் நின்றிருந்த பயனாளிகள் முண்டியடித்தபடி சென்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 3 லட்சத்து 66 ஆயிரம் அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு, 73 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கொரோனோ சிறப்பு நிவாரண உதவிகள் வழங்கப்படுகின்றன. காஞ்சிபுரத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் விநியோகத்தை தொடங்கி வைத்தார்.

 

மதுரை மாவட்டத்தில் ஆயிரத்து 354 ரேசன் கடைகள் மூலம், 8 லட்சத்து 72 ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு, கொரோனா சிறப்பு நிவாரண தொகுப்பு வழங்கப்படுகிறது. மதுரை கருப்பாயூரணி மேல்நிலைப்பள்ளியில் அமைச்சர் மூர்த்தி விநியோகத்தை துவக்கி வைத்தார்.

 

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆயிரத்து 133 ரேசன் கடைகள் மூலம் 5 லட்சத்து 89 ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 14 பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு வழங்கப்படுகிறது. திருவள்ளூரில் எம்எல்ஏ வி. ஜி ராஜேந்திரன், இதைத் தொடங்கி வைத்தார். பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி முகக் கவசங்கள் அணிந்து நிவாரண உதவிகளை பெற்றுச் சென்றனர்.

 

கடலூர் மாவட்டத்தில் ஆயிரத்து 400 நியாயவிலை கடைகளில் சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு, 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் தொகுப்பு விநியோகிக்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments