”தங்களது தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக 90 சதவீத பாதுகாப்பை அளிக்கும்” -அமெரிக்க நிறுவனமான நோவாவேக்ஸ் அறிவிப்பு

0 4014
”தங்களது தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக 90 சதவீத பாதுகாப்பை அளிக்கும்” -அமெரிக்க நிறுவனமான நோவாவேக்ஸ் அறிவிப்பு

கொரோனாவுக்கு எதிராக தங்களது தடுப்பூசி திறம்பட செயலாற்றுதுடன், பலவித மரபணு மாற்ற வைரசுகளுக்கு எதிரான பாதுகாப்பை அது வழங்கும் என்று அமெரிக்க பயோடெக் நிறுவனமான நோவாவேக்ஸ் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் நடத்தப்பட்ட சோதனைகளில் இந்த தடுப்பூசி 90 சதவிகித பாதுகாப்பை அளிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக நோவாவேக்ஸ் கூறியுள்ளது.

அமெரிக்காவில் தடுப்பூசிக்கான தேவை பலமடங்கு குறைந்துள்ளது. ஆனால் பல நாடுகளில் அதற்கு கிராக்கி உள்ளது.எனவே, அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு துறையின் அனுமதி கிடைத்தவுடன்,வளர்ந்து வரும் நாடுகளுக்கு அதை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தடுப்பூசியை இருப்பு வைப்பதும் எடுத்து செல்வதும் சுலபம் எனவும் நோவாவேக்ஸ் தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசியை இந்தியாவில் சீரம் இந்தியா நிறுவனம் தயாரிக்கும் என கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments