சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணை தலைவராக ஓ.பன்னீர்செல்வம்; அதிமுக கொறடாவாக எஸ்.பி.வேலுமணி தேர்வு
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வமும், அதிமுக கொறடாவாக எஸ்.பி.வேலுமணியும் அக்கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம், அக்கட்சித் தலைமையகத்தில் ஓபிஎஸ்-இபிஎஸ் தலைமையில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், அதிமுக சட்டமன்ற கட்சியின் துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வமும், அதிமுக கொறடாவாக எஸ்.பி.வேலுமணியும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
துணை கொறடாவாக அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி, பொருளாளராக கோவில்பட்டி எம்எல்ஏ கடம்பூர் ராஜூ, செயலாளராக பாலக்கோடு எம்எல்ஏ கே.பி.அன்பழகன், துணைச் செயலாளராக ஆலங்குளம் எம்எல்ஏ பி.ஹெச்.மனோஜ் பாண்டியன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி உள்ள மற்ற பொறுப்பாளர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
Comments