முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, காமராஜ் மீது உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்குகளைத் திரும்பப் பெற்றார் சபாநாயகர் அப்பாவு

0 3476

முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, காமராஜ் ஆகியோருக்கு எதிரான புகார்களின் மீது வழக்குப் பதிய உத்தரவிடக் கோரிச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்குகளை சபாநாயகர் அப்பாவு திரும்பப் பெற்றுள்ளார்.

அதிமுக ஆட்சியில் எல்.இ.டி. விளக்குகள் திட்டத்தில் முறைகேடு செய்ததாக அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராகவும், பொதுவழங்கல் அரிசித் திட்டத்தில் முறைகேடு செய்ததாக அப்போதைய உணவுத்துறை அமைச்சர் காமராஜுக்கு எதிராகவும் லஞ்ச ஒழிப்புத் துறையில் அப்பாவு புகார் அளித்தார்.

நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த 3 வழக்குகளும் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சபாநாயகர் அப்பாவு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வழக்குகளைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாகத் தெரிவித்தார். இதையடுத்து 3 வழக்குகளையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments