கொரோனா நிவாரண நிதி 2000 ரூபாய் மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் இந்த மாத இறுதி வரை ரேஷன் கடைகளில் வழங்கப்படும் - அமைச்சர் சக்கரபாணி
கொரோனா நிவாரண நிதியின் 2-வது தவணை மற்றும் 14 வகை மளிகைப் பொருட்களை இம்மாத இறுதி வரையில் ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் 14 வகை மளிகைப் பொருட்கள் மற்றும் 2ஆயிரம் ரூபாய் 2-வது தவணை கொரோனா நிதி நாளை முதல் ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்படவுள்ளது. இதற்கான டோக்கன்கள் கடந்த 11-ந் தேதி முதல் வீடு வீடாக விநியோகம் செய்யப்பட்டன. இந்த நிலையில், நாளை முதல் இம்மாத இறுதி வரையில் நிவாரண நிதியை பெற்றுக் கொள்ளலாம் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதி, நேரத்தின் படி பொதுமக்கள் அவசரமின்றி நிவாரண நிதியையும், மளிகைப் பொருள் தொகுப்பையும் பெற்றுச் செல்லலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
Comments