குழந்தைகளுக்கு கொரோனா தொற்று வராமல் காக்க வழிகாட்டுதல்... மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் வெளியீடு

0 9497

ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா, ஓமியோபதி மருத்துவங்களை உள்ளடக்கிய ஆயுஷ் அமைச்சகம் குழந்தைகளுக்கு கொரோனா தொற்று வராமல் காப்பதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

அதில் முகக்கவசம் அணிதல், யோகாசனம் செய்தல், எதிர்ப்பாற்றலை உண்டாக்கும் ஆயுர்வேத மருந்துகள், ஊட்டச்சத்து மருந்துகளைப் பயன்படுத்தல், பெற்றோர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல் உள்ளிட்ட ஆலோசனைகளை அதில் குறிப்பிட்டுள்ளது.

குழந்தைகளின் நோய் எதிர்ப்பாற்றல் வலுவானது என்றாலும், பல உருமாறிய வைரஸ்கள் தோன்றுவதால் கொரோனா தடுப்புக்கான அனைத்து விதிகளையும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments