சிவசங்கர் பாபா வழக்கில் விசாரணையைத் தொடங்கினர் சி.பி.சி.ஐ.டி. போலீசார்

0 2754

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், சாமியார் சிவசங்கர் பாபா மீதான போக்சோ வழக்கில் சிபிசிஐடி விசாரணை  தொடங்கியுள்ளது.

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளியை நடத்தி வரும் சிவசங்கர் பாபா, தன்னை கடவுளின் அவதாரம் என அழைத்துக் கொண்டு, பள்ளியில் பயிலும் மாணவிகளை பக்தையென கூறி பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. 3 மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில், போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் சிவசங்கர் பாபா மீது வழக்கு பதிவு செய்து, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இவ்வழக்கில் சிபிசிஐடி டிஎஸ்பி குணவர்மன், காவல் ஆய்வாளர் ஜெயசங்கர் ஆகியோர் விசாரணை அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு விசாரணையை தொடங்கியுள்ளனர். வழக்கு தொடர்பான ஆவணங்களை செங்கல்பட்டு மாவட்ட காவல் துறையிடம் இருந்து பெற்று சிபிசிஐடி போலீசார் புதிதாக வழக்கு பதிவு செய்ய உள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments