இந்தியாவிலேயே முதல் முறையாக போதை பொருள் கேக் விற்ற 3 பேர் கைது
இந்தியாவிலேயே முதல் முறையாக மும்பையில் போதை பொருள் கேக் விற்பனையில் ஈடுபட்ட பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிழக்கு மலாட் பகுதியில் உள்ள பேக்கரியில் Edible weed pot brownie என்று அழைக்கப்படும் மரிஜூவனா வகை கஞ்சாவை மூலப் பொருளாக கொண்டு தயாரிக்கப்படும் கேக் விற்கப்படுவதாக போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிரடி சோதனையில் ஈடுபட்ட போலீசார் பேக்கரியில் விற்பனைக்கு இருந்த 830 கிராம் எடை கொண்ட 10 போதை பொருள் கேக் மற்றும் 60 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மேலும் கைதான 3 பேர் கொடுத்த தகவலை கொண்டு பாந்த்ரா பகுதியில் இயங்கி வந்த Jagat Chaurasia என்ற கஞ்சா வியாபாரியையும் கைது செய்து 125 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Comments