ஓ.பி.எஸ்- இ.பி.எஸ். தலைமையில் இன்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பகல் 12 மணிக்கு கூட்டம் தொடங்குகிறது. சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத்தலைவர், கொறடா பதவி யாருக்கு ?என்பது இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆளுநர் உரையுடன் வருகிற 21 -ஆம் தேதி, சட்டப்பேரவை கூடும் நிலையில், அதிமுக எம்.எல்.ஏக்கள் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
Comments