தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை இன்று தொடங்குகிறது

0 3855

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் பிளஸ் - ஒன் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இன்று தொடங்குகிறது.

கொரோனா பரவல் காரணமாக 10 - வது வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப் பட்டு, ஆல் பாஸ் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. எனவே, 9 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பிளஸ் - ஒன் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

மாணவர்கள் பெற்றோருடன் சம்பந்தப்பட்ட பள்ளியை அணுகி உரிய சான்றிதழ்களை சமர்பித்து விரும்பிய பாடப்பிரிவுகளை தேர்வு செய்துகொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதனிடையே, அடுத்த வாரம் முதல் பிளஸ் - ஒன் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்க உள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments