பெட்ரோல் , டீசல் விலை குறித்து பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதை ஏற்றுக் கொண்டாலும், கொரோனா தடுப்பூசிக்காக ஆண்டு ஒன்றுக்கு 35 ஆயிரம் கோடி ரூபாயை அரசு செலவிடுவதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என பெட்ரோலியம் அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் இதை தெரிவித்த அவர்,இந்த நெருக்கடியான காலகட்டத்தில், பெட்ரோல்-டீசல் வரிகள் வாயிலாக கிடைக்கும் பணம் நல்வாழ்வுத் திட்டங்களுக்குத் தான் பயன்படுத்தப்படுகிறது என்றார்.
பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் ஏழை மக்கள் பாதிக்கப்படுவதாக கூறும் ராகுல் காந்தி, காங்கிரஸ் அதிகாரத்தில் இருக்கும் பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிர முதலமைச்சர்களிடம் பேசி, முதலில் வரியை குறைக்கட்டும் எனவும் தர்மேந்திர பிரதான் கூறினார்.
Comments