"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
கொரோனா எதிரொலியாக, ரயில்வேயில் நடைமேடை கட்டண வசூல் பல மடங்கு குறைந்தது - ரயில்வே அமைச்சகம்
கொரோனா பரவல் காரணமாக ரயில் நிலையங்களில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், 2020-21 ல் நடைமேடை கட்டண வசூல் 94 சதவிதம் குறைந்து விட்டதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த நிதியாண்டில் பிப்ரவரி மாதம் வரை வெறும் 10 கோடி ரூபாய் மட்டுமே நடைமேடை கட்டணமாக கிடைத்தது என RTI பதில் ஒன்றில் ரயில்வே தெரிவித்துள்ளது. 2019-20 நிதியாண்டில் இந்த வகையில், ரயில்வேக்கு 160 புள்ளி 87 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது.
கொரோனா பரவுவதை தடுக்க பல ரயில் நிலையங்களில் நடைமேடை சீட்டுகள் வழங்கப்படவில்லை, பல நிலையங்களில் அந்த கட்டணம் 10 ரூபாயில் இருந்து 50 ரூபாய் வரை உயர்த்தப்பட்டு, தேவையற்ற மக்கள் கூட்டம் தவிர்க்கப்பட்டது
Comments