நாட்டிலேயே முதன் முறையாக, ராஜஸ்தானின் பிகானீர் நகரில் வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் திட்டம் துவக்கம்
நாட்டிலேயே முதன் முறையாக, ராஜஸ்தானின் பிகானீர் நகரில் வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் திட்டம் வரும் 15 ஆம் தேதி துவக்கப்படுகிறது.
45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த வகையில் வீடு வீடாக சென்று தடுப்பூசி போடப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது. இவர்கள் அதற்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள வாட்ஸ்ஆப் எண்ணுக்கு தகவல் கொடுக்க வேண்டும்.
ஆனால் ஒரு பகுதியில் குறைந்தது 10 பேராவது இப்படி தகவல் அளித்தால் மட்டுமே வீட்டுக்கு வந்து தடுப்பூசி போடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பிகானீரில் மக்கள் கூடும் இடங்களுக்கு சென்று 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடக்கூடிய vaccination on wheels திட்டமும் கடந்த 12 ஆம் தேதி துவக்கப்பட்டது.
Comments