டெல்லியில் 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் உணவு விடுதிகள் இயங்க அனுமதிக்கப்படும் - டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால்

0 3674

டெல்லியில் 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் உணவு விடுதிகள் இயங்க அனுமதிக்கப்படும் என முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். வரும் 14 ஆம் தேதி நடைமுறைக்கு வர உள்ள கொரோனா ஊரடங்கின் 3 ஆம் கட்ட தளர்வுகளை அவர் அறிவித்துள்ளார்.

ஆனால் கல்வி நிறுவனங்கள்-பயிற்சி மையங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். பொது இடங்களில் கூட்டம் நடத்த அனுமதி இல்லை. நீச்சல் குளங்கள், திரையரங்குகள், பொழுதுபோக்கு பூங்காக்கள், நிகழ்ச்சி அரங்குகள் உள்ளிட்டவையும் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். 

திருமணம் மற்றும் துக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்க 20 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். டெல்லி மெட்ரோ மற்றும் பேருந்துகள் 50 சதவிகித பயணியருடன் இயங்கும். ஆட்டோ மற்றும் டாக்சிகளில் இரண்டு பயணிகள் வரை மட்டுமே செல்லலாம்.

வழிபாட்டுத் தலங்களை திறந்தாலும், அவற்றில் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது. அதே நேரம் கொரோனா பரவல் அதிகரித்தால், மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments