பெண் காவலர்களை சாலையோரங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டாம் - டிஜிபி உத்தரவு
அலுவல் மற்றும் ஆய்வுப் பணிகளுக்கு முதலமைச்சர் வெளியில் செல்லும்போது பெண் காவலர்களை சாலையோரங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க டி.ஜி.பி உத்தரவிட்டுள்ளார்.
சென்னைக்குள்ளோ வெளி மாவட்டங்களுக்கோ முதலமைச்சர் சாலை மார்க்கமாக செல்லும் போது சாலையின் குறுக்கே வாகனங்களில் யாரும் வந்துவிடக் கூடாது என்பதற்காக இரு புறமும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்கள்.
இவ்வாறான பணிகளில் ஈடுபடுத்தப்படும் பெண் காவலர்கள் நீண்ட நேரம் நிற்க வேண்டிய சூழல் உள்ளதால், இயற்கை உபாதை உட்பட உடல் ரீதியான பல சிரமங்களை அவர்கள் அனுபவிக்க நேரிடுகிறது.
அதனை கருத்தில் கொண்டு பெண் காவலர்களை சாலையோரங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. அதன்படி அதுபோன்ற சமயங்களில் இனி பெண் காவலர்களை பணியில் அமர்த்த வேண்டாம் என தமிழக டிஜிபி திரிபாதி உயரதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
Comments