ஜெப் பெசோசுடன் விண்வெளி செல்லும் பயணம்... 205 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்த நபர்
அமேசான் நிறுவனர் ஜெப் பெசோசுடன் விண்கலத்தில் விண்வெளிக்குச் செல்லும் வாய்ப்பை 205 கோடி ரூபாய்க்கு ஒருவர் ஏலத்தில் எடுத்துள்ளார்.
ஜெப் பெசோசின் ராக்கெட் நிறுவனமான புளூ ஆரிஜின், நியூ செப்பர்டு என்கிற விண்கலத்தை ஜூலை 20ஆம் நாள் விண்ணில் செலுத்துகிறது. இதில் ஜெப் பெசோஸ், அவர் தம்பி மார்க் ஆகியோர் விண்வெளிக்குச் செல்ல இருக்கின்றனர். நியூ செப்பர்டு விண்கலத்தில் மொத்தம் 6 பேர் செல்ல முடியும் என்பதால், மற்ற இருக்கைகளில் செல்லும் வாய்ப்பை ஏலத்தில் விற்க முடிவு செய்தனர்.
இதன்படி மூன்றாவது இருக்கையில் செல்லும் வாய்ப்புக்கான ஏலத்தில் 159 நாடுகளைச் சேர்ந்த ஏழாயிரத்து ஐந்நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அதிக அளவாக 205 கோடி ரூபாய்க்கு ஒருவர் ஏலம் எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ள புளூ ஆரிஜின் நிறுவனம் அவர் பெயரை வெளியிடவில்லை.
Comments