கொரோனா 3 ஆம் அலையில் சிறார்களுக்கு பெரிய பாதிப்பு இருக்காது ?

0 4455

கொரோனா 3 ஆம் அலை வீசும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அது சிறார்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக பிரபல மருத்துவ இதழான Lancet தெரிவித்துள்ளது.

3 ஆம் அலையில் இந்தியாவில் 10 வயதிற்கும் குறைவான சிறார்கள் பாதிக்கப்பட்டாலும், சர்வதேச அளவுடன் ஒப்பிடும் போது அது சமமாகவே இருக்கும் என ஆய்வு தெரிவிக்கிறது. தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் 10 அரசு-தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்ட சுமார் 2600 சிறார்களின் மருத்துவ தரவுகளின் அடிப்படையில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

பல சிறார்களுக்கு  தொற்று பாதித்தாலும் எந்த அறிகுறியும் இருக்காது எனவும், அப்படி அறிகுறிகள் காணப்பட்டாலும் அது மிதமானதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல்,சுவாச-வயிற்று கோளாறுகள் மட்டுமே காணப்படும் என கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments