தமிழகத்தில் 1 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 3228

தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே ஒரு லட்சம் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் எக்ஸ்னோரோ நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட 50 ஆக்சிஜன் செறிவூட்டிகளை அமைச்சர் மா.சுப்ரமணியன் பெற்றுக்கொண்டார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 3 லட்சத்து 26 ஆயிரத்து 573 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்பதே அரசின் திட்டம் என்றும், எனவே மக்கள் யாரும் தடுப்பூசி மையங்களுக்கு முண்டியடித்துச் செல்ல வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments