சீனாவின் அதிகாரத்துக்கு கடிவாளம் - ஜோபைடன் தலைமையில் ஜி 7 உறுதி

0 4699

சீனாவின் ஆதிக்கத்திற்கு எதிரான உள்கட்டமைப்புத் திட்டங்களை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் மேற்கொள்ள ஜி 7 நாடுகள் உறுதியளித்துள்ளன. புதிய பன்னாட்டு உள்ட்டமைப்பை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

சீனா பெல்ட் அண்ட் ரோடு என்று வர்த்தக திட்டத்தை வருவாய் குறைந்த நாடுகளுக்காகவும் நடுத்தர நாடுகளுக்காகவும் அறிவித்துள்ளது. இந்த நாடுகளின் உள்கட்டமைப்புகளுக்கு நிதி வழங்குவதற்கு இத்திட்டம் வகை செய்கிறது. இதற்கு மாற்றாக ஜி 7 நாடுகளின் கூட்டமைப்பு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டம் சீனாவுக்குப் போட்டியாக அமைய உள்ளது.

இத்திட்டம் இந்தியாவுக்கு வரவேற்கத்தக்க திட்டமாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது. சீனாவின் உள்கட்டமைப்புத் திட்டம் இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கப்படுவது இந்தியாவின் கவனத்துக்குரியதாக உள்ளது. பி.ஆர். ஐ திட்டம் மூலம் தனது பொருளாதார மண்டலத்தையும் அரசியல் அதிகாரத்தையும் விரிவுபடுத்த சீனா  திட்டமிடுவதாக இந்தியா கருதுகிறது. 

கடந்த காலத்தில் சீனாவின் பொருளாதார திட்டங்களுக்கு இந்தியா ஆதரவு அளிக்கவில்லை. ஆக்ரமிப்பு காஷ்மீர் வழியாக சீனா பாகிஸ்தான் பொருளாதார மண்டலம் அமைப்பதற்கும் இந்தியா எதிர்ப்புத் தெரிவித்தது. தற்போது ஜி 7 நாடுகளின் உள்கட்டமைப்பு திட்டம் மூலமாக வளரும் நாடுகளுக்குத் தேவைப்படும் சுமார் 4 கோடி டாலர் நிதியுதவிக்கு வழி பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனாவின் பேரிடரால் பொருளாதாரம் சிதறிய நிலையில் இந்த புதிய திட்டம் பெரும் மீட்சிக்கான நடவடிக்கையாகவும் சிறிய நாடுகளுக்கு உதவக்கூடியதாக கருதப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments