கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மீறியதாக பிரேசில் அதிபருக்கு அபராதம்
கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறியதாக பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனேரோவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சா பவுலா மாகாணத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அதிபர் போல்சனேரோ ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் சேர்ந்து முக கவசம் அணியாமல் வாகன பேரணியில் ஈடுபட்டார். இதையடுத்து சா பவுலா மாகாணத்தின் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறி முக கவசம் அணியாதது, அதிகளவில் ஆதரவாளர்களை திரட்டி பேரணியில் ஈடுபட்டது உள்ளிட்ட விதி மீறல்களுக்காக 110 டாலர்கள் அபராதமாக விதிக்கப்பட்டதாக மாகாண ஆளுநர் Joao Doria தெரிவித்தார்.
பிரேசிலில் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 12 சதவீதம் பேருக்கு மட்டுமே முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ள நிலையில் முக கவசம் அணிவது குறித்து அதிபர் பல்வேறு விமர்சனங்களை வெளியிட்டு வருகிறார்.
Comments