லட்சத்தீவு நடிகையும் இயக்குனருமான ஆயிஷா சுல்தானாவுக்கு பெருகும் ஆதரவு

0 6102

லட்சத்தீவைச் சேர்ந்த நடிகையும் இயக்குனருமான ஆயிஷா சுல்தானா மீதான தேச துரோக வழக்கை ரத்து செய்யக் கோரி ஆதரவு பெருகி வருகிறது.

கேரளத்தின் இடதுசாரிக் கட்சிகள் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் கேரள அமைச்சர்கள் ஆயிஷாவுக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளனர். லட்சத்தீவில் கோவிட் நோயைப் போக்க நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று விமர்சித்து எழுதியதற்காக ஆயிஷா மீது தேசதுரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஆயிஷாவுடன் தொலைபேசியில் பேசிய கேரள அமைச்சர் சிவன்குட்டி தமது ஆதரவைத் தெரிவித்துள்ளார். அவர் விடுத்த அறிக்கையில் ,மதசார்பற்ற அனைத்து இயக்கங்களும் ஆயிஷா சுல்தானாவைப் பார்த்து பெருமைப்படுவதாகத் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments