கோவாக்சின் தடுப்பூசிக்கு சர்வதேச அங்கீகாரத்தைப் பெற பாரத் பயோடெக் நிறுவனம் நடவடிக்கை
இந்தியாவின் உள்நாட்டு கொரோனா தடுப்பூசியான கோவாக்சினுக்கு சர்வதேச அங்கீகாரத்தைப் பெறும் நடவடிக்கையில் இறங்கியுள்ள அதன் உற்பத்தி நிறுவனமான பாரத் பயோடெக் அனைத்து ஆய்வுகளின் தரவுகளை தாக்கல் செய்துள்ளது.
முதல் கட்டம் இண்டாம் கட்டம் பரிசோதனை விவரங்கள் முழுவதுமாகவும் மூன்றாம் கட்டப் பரிசோதனையின் சில பகுதிகளும் வெளியிடப்பட்டுள்ளன. மூன்றாம் கட்ட ஆய்வுகளின் முழுமையான தரவுகளும் இம்மாதம் 20ம் தேதிக்குள் முழுமையாக வெளியிட இருப்பதாகவும் பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே இந்த நிறுவனம் 9 ஆய்வேடுகளை வெளியிட்டு கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது என்பதை தெரிவித்துள்ளது. கொரோனா பேரிடர் தொடங்கிய ஓராண்டிக்குள் இந்தியா இந்த மருந்தை உருவாக்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments