மும்பை, தானேயில் அதிகனமழை எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம்

0 3241

மும்பையிலும், தானே உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளிலும் அடுத்த இரு நாட்களுக்கு அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மும்பை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மும்பை, தானே, ராய்காட், ரத்தினகிரி மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களில் அதிகன மழை பெய்யக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.

இதனால் நகரின் தாழ்வான பகுதிகளிலும், கடலோரப் பகுதிகளிலும் உள்ளவர்கள் பாதுகாப்பான பகுதிக்குச் செல்லும்படி மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கனமழையின்போது மக்கள் வெளியில் நடமாட வேண்டாம் என்றும், கடலோரப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது. தீயணைப்புத் துறையினர், மாநிலப் பேரிடர் மீட்புப் படை, தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments