தனியார் மருத்துவமனைகள் 10 சதவீதம் ஆக்ஸிஜன், ஐசியு படுக்கைகளை ஒதுக்க வேண்டும் : புதிய அரசாணை வெளியீடு
தனியார் மருத்துவமனைகள் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், 10 சதவீதம் அளவுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஐசியு படுக்கைகளை ஒதுக்க வேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் வரும் தனியார் மருத்துவமனைகள் 50% படுக்கைகளை கொரோனா பாதித்தவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என அரசாணை ஏற்கனவே வெளியிடப்பட்டது.
சில மருத்துவமனைகள் இந்த உத்தரவை முறையாக பின்பற்றவில்லை என்ற புகார் எழுந்தது. மேலும் எந்த வகை சிகிச்சைகளுக்காக படுக்கைகள் ஒதுக்கப்பட வேண்டும் என்ற குழப்பமும் நிலவி வந்தது.
இந்த நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய அரசாணையில், தனியார் மருத்துவமனைகளில் ஒதுக்கப்பட்டுள்ள 50 சதவீத படுக்கைகளில் 10 சதவீதம், ஆக்ஸிஜன் மற்றும் தீவிர சிகிச்சைப்பிரிவு படுக்கைகளாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு சிகிச்சை வழங்குவதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க உத்தரவிட்டிருப்பதாகவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments