சவூதியில் வசிக்கும் 60,000 பேருக்கு மட்டுமே இந்த ஆண்டு புனித ஹஜ்ஜுக்கு அனுமதி
இந்த ஆண்டு புனித ஹஜ் பயணத்தில் 60 ஆயிரம் பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படும் என சவூதி அரேபியா அறிவித்துள்ளது.
கொரோனா காரணமாக இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக, சவூதி அரசின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்த 60 ஆயிரம் பேரும் சவூதி அரேபியாவுக்குள் வசிப்பவர்கள் மட்டுமே எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.எனவே வெளிநாடுகளில் இருந்து இந்த ஆண்டும் யாரும் ஹஜ் பயணம் மேற்கொள்ள இயலாது.
கடந்த ஆண்டிலும், சவூதியில் வசித்த 1000 பேருக்கு மட்டுமே ஹஜ் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் 160 நாடுகளை சேர்ந்த அங்குள்ள வெளி நாட்டினரும், ஒரு பங்கு சவூதி பாதுகாப்பு மற்றும் மருத்துவ பணியாளர்களும் ஆவர். அடுத்த மாத மத்தியில் புனித ஹஜ் சடங்குகள் துவங்குகின்றன.
Comments