அமெரிக்காவின் உயரிய விருதை தட்டிச்சென்ற இந்திய வம்சாவளி பெண் பத்திரிகையாளர்
இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் பத்திரிக்கையாளருக்கு அமெரிக்காவின் மிக உயரிய விருதான புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவை பூர்வீகமாக கொண்ட மேகா ராஜகோபாலன் என்ற பத்திரிக்கையாளர் சர்வதேச செய்தியாளர் பிரிவுக்கான புலிட்சர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். பஸ்ஃபீட் நியூஸ் (BuzzFeed News) இல் பணியாற்றிவரும் இவர், 2017 ஆம் ஆண்டு சீனாவில் உய்குர் இன இஸ்லாமியர்கள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதை உலகுக்கு அம்பலப்படுத்தினார்.
அதற்காகவே இவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. புலிட்சர் விருது அறிவிப்பை லண்டனிலிருந்து நேரலையில் பார்த்துக்கொண்டிருந்த மேகா, தனக்கு இந்த விருது கிடைக்கும் என சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை என தெரிவித்தார். புலிட்சர் பரிசுகள் ஆண்டுதோறும் 21 பிரிவுகளின்கீழ் வழங்கப்படுகின்றன.
Comments