ஜம்மு கஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 போலீசார் உட்பட 4 பேர் உயிரிழப்பு
ஜம்மு கஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 போலீசார் வீர மரணம் அடைந்த நிலையில் பொதுமக்களிலும் இருவரும் உயிரிழந்தனர்.
பாராமுல்லா மாவட்டம் அரம்பொரா (Arampora) பகுதியில் உள்ள சோதனைச்சாவடி மீது லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் இரண்டு போலீசார் வீர மரணம் அடைந்தனர்.
பொதுமக்கள் இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தாக்குதல் நடத்தியவர்கள் தப்பி விடாமல் தடுக்க அப்பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
Comments