பொதுமக்களை கெஞ்சி கேட்கிறேன்..! நோய்த்தடுப்பு விதிமுறைகளை தவறாமல் பின்பற்றுங்கள் -முதலமைச்சர் வேண்டுகோள்

0 4376

மிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நோய்த்தடுப்பு விதிமுறைகளை மக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என கெஞ்சிக் கேட்டுக் கொள்வதாகக் கூறியுள்ளார்.

சேலம் மாவட்டம் மேட்டூரில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், திமுக ஆட்சிக்கு வந்த போது தினசரி கொரோனா பாதிப்பு 36 ஆயிரமாக இருந்ததாகவும், 60ஆயிரத்தை தொடும் எனக் கூறப்பட்டதாகவும் தெரிவித்தார். ஆனால் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வந்திருப்பதாக அவர் கூறினார்.

டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததன் அடிப்படையில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டார். கொரோனா அதிகம் உள்ள மாவட்டங்களில் டாஸ்மாக்குகள் திறக்கப்படவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

பிரதமர் மோடியை டெல்லியில் சந்திக்க வரும் 17ந் தேதி நேரம் கேட்கப்பட்டுள்ளது என்றும் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments