ஒரே நாளில் 50 லட்சம் மரக்கன்றுகள் நட்டு சாதனை..! காடுகள் அழிப்புக்கு எதிராக கானா அரசு நடவடிக்கை
காடுகள் அழிப்புக்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொள்ளும் விதமாக மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில் ஒரே நாளில் 50 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டன.
இழந்த காடுகளை மீண்டும் உருவாக்கவும், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கவும் பசுமை கானா என்ற திட்டத்தை கையிலெடுத்த அந்நாட்டு அரசு, 2024 க்குள் 10 கோடி மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளது.
அதன்படி, நேற்று ஒரே நாளில் 50 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, நட்டதாக கானா வனத்துறை தெரிவித்துள்ளது. பள்ளிகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மரக்கன்றுங்கள் நடபட்டன.
Comments