ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை செயல்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு..! புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான திட்டம் என நீதிபதிகள் விளக்கம்

0 5493

ரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை அனைத்து மாநில அரசுகளும் விரைவில் அமல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புலம் பெயரும் தொழிலாளர்கள் எந்த இடத்தில் வசித்தாலும், அவர்களின் ரேஷன் அட்டை எந்த ஊரில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அவர்களுக்கு நாட்டின் எந்த ஒரு பகுதியிலும் தடையின்றி ரேஷன் பொருட்கள் கிடைக்க மத்திய அரசு ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை அறிமுகம் செய்தது.

மேற்குவங்கம் உள்ளிட்ட சில மாநில அரசுகள் இதற்கு ஆட்சேபம் தெரிவித்ததற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். இத்திட்டம் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கானது என்பதால், அனைத்து மாநில அரசுகளும் எந்தவிதக் காரணமும் கூறாமல் இந்தத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இதனை நடைமுறைப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில அரசுகளும் சுருக்கமான அறிக்கை தாக்கல் செய்யவும் ஆணையிடப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments