உலகின் மிகப் பெரிய பனித் தீவு உருகி வருவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை..!
அண்டார்டிக்காவில் உள்ள மிகப்பெரிய பனித் தீவு வேகமாக உருகி வருவதால் அடுத்த 20 ஆண்டுகளில் காணாமல் போய்விடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
அண்டார்க்டிக்காவின் மேற்குப் பகுதியில் உள்ள பைன் தீவு முழுவதும் பனிப்பாளங்களால் உருவானது. பருவநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதல் போன்ற காரணிகளால் பைன் தீவு வேகமாக உருகி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் கடந்த 3 ஆண்டுகளில் தீவின் ஓரங்கள் பெரும்பாலும் அரிக்கப்பட்டு அமன்ட்சென் கடலுக்குள் கரைந்து போனது தெரியவந்தது.
அடுத்த 20 ஆண்டுகளில் இந்த தீவு முழுவதும் கரைந்து போகும் என்றும் இதனால் அண்டார்க்டிகா பகுதியில் கடல் நீர்மட்டம் ஒரு அடிக்கும் மேல் உயரும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
Comments