கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு செவித்திறன் பாதிப்பு? டெல்லியில் 2 மாதங்களில் 15 பேர் செவித்திறன் இழப்பு
கொரோனா பாதிப்புக்குள்ளான சில நோயாளிகளுக்கு செவித்திறன் இழப்பு ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
கொரோனா தொற்றிலிருந்து மீண்ட சிலர் காதுகளில் இரைச்சல் அல்லது விசில் போன்ற சப்தம் கேட்பதாகக்கூறி டெல்லி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெல்லி அம்பேத்கர் மருத்துவமனை புள்ளி விபரங்களின் படி கடந்த 2 மாதங்களில் காது கேளாமைக் கோளாறினால் 15 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவரும் பெருந்தொற்றிலிருந்து மீண்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
எனவே பெருநோயிலிருந்து மீண்டவர்கள் காதுகளில் வலி அல்லது வேறு பிரச்னைகள் இருந்தால் அடுத்த 72 மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்குச் சென்றுவிட வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.
தாமதமானால் செவித்திறன் முழுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
Comments