வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைதான தடகள பயிற்சியாளர் நாகராஜனின் ஜாமீன் மனு தள்ளுபடி

0 2801

சென்னையில் பயிற்சி வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைதான தடகள பயிற்சியாளர் நாகராஜனின் ஜாமீன் மனுவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தன்னிடம் பயிற்சிக்கு வரும் வீராங்கனைகளுக்கு பிசியோதெரபி வழங்குவதாக கூறி நாகராஜன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக, பாதிக்கப்பட்ட வீராங்கனை அளித்த புகாரில் போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிந்து போலீசார் அவனை கைது செய்தனர்.

நாகராஜனால் தாங்களும் பாதிக்கப்பட்டதாக மேலும் 5 வீராங்கனைகள் எழுத்துப்பூர்வ புகாரளித்திருந்தனர். இந்த நிலையில், ஜாமீன் கோரி நாகராஜன் தாக்கல் செய்த மனு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, விசாரணை ஆரம்பக் கட்டத்தில் இருப்பதால் ஜாமின் வழங்கக் கூடாது என காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments