அடுத்த 10 ஆண்டுகளில் எய்ட்சை முற்றிலும் ஒழிக்க முடியும் - அமைச்சர் ஹர்சவர்த்தன்
புதிதாக எவருக்கும் எச்ஐவி பரவவில்லை என்னும் நிலையை உருவாக்கிப் பத்தாண்டுகளில் எய்ட்சுக்கு முடிவுகட்ட வேண்டும் என மத்திய நலவாழ்வுத்துறை அமைச்சர் ஹர்சவர்த்தன் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. பொதுச்சபை 75ஆம் ஆண்டுக் கூட்டத்தில் காணொலியில் உரையாற்றிய அமைச்சர் ஹர்சவர்த்தன், இந்தியாவில் எச்ஐவி தொற்றுள்ளோரின் மனித உரிமைகளைக் காக்கும் வகையில் சட்டம் கொண்டு வந்துள்ளதாகத் தெரிவித்தார்.
இந்தியாவில் எச்ஐவி தொற்றுள்ள 14 லட்சம் பேருக்கு இலவசச் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், இந்திய மருந்துகள் ஆப்பிரிக்காவில் லட்சக்கணக்கானோருக்கு வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
புதிதாக எவருக்கும் எச்ஐவி பரவவில்லை என்னும் இலக்கை அடைந்தால் அடுத்த பத்தாண்டுகளில் எய்ட்சை முற்றிலும் ஒழிக்க முடியும் எனக் குறிப்பிட்டார்.
Comments