ரூ.2,790 கோடி மதிப்பிலான கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை குறித்து விளக்கம் அளிக்க வசீர் எக்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ்
2ஆயிரத்து 790 கோடி ரூபாய் மதிப்பிலான கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை குறித்து விளக்கம் அளிக்குமாறு வசீர் எக்ஸ் (WazirX) நிறுவனத்திற்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சட்டவிரோத ஆன்லைன் பெட்டிங் ஆப்கள் மூலம் சுருட்டிய 57 கோடி ரூபாயை, சீனர்கள் சிலர், இந்திய ரூபாயில் இருந்து கிரிப்டோகரன்சியாக மாற்றி, பின்னர் கேமேன் தீவுகளில் பதிவுசெய்யப்பட்ட ஃபாரின் எக்ஸ்சேஞ்ச் மூலம் மீண்டும் பணமாக மாற்றிக் கொண்டது அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்த விசாரணையின்போது, பணமோசடி தடுப்பு மற்றும் தீவிரவாத நிதியுதவி தடுப்பு தொடர்பான ஆவணங்களை பெறாமல், கேமேன் தீவுகளில் பதிவுசெய்யப்பட்ட ஃபாரின் எக்ஸ்சேஞ்சுக்கு 2ஆயிரத்து 200 கோடி ரூபாய் வசீர்எக்ஸ் மூலம் பரிவர்த்தனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்தே, கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை நிறுவனமான வசீர்எக்ஸ் மற்றும் அதன் இயக்குநர்கள் நிஷால் ஷெட்டி, சமீர் ஹனுமான் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Comments