பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ள நிலையில், சிவசங்கர் பாபா நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி

0 4245

பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ள நிலையில், சிவசங்கர் பாபா நெஞ்சுவலி காரணமாக, உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது தரப்பில் தெரிவித்துள்ளனர்.

தன்னை கடவுளின் அவதாரம் என அழைத்துக் கொள்ளும் சிவசங்கர்பாபா, சுஷில் ஹரி இண்டர்நேஷனல் எனப்படும் தனது உண்டு உறைவிட பள்ளியில் பயிலும் மாணவிகளை பக்தையென கூறி பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விசாரணைக்கு சம்மன் அனுப்பியும் சிவசங்கர் பாபா ஆஜராகவில்லை.

சுஷில் ஹரி பள்ளி தாளாளர் வெங்கட்ராமன் உள்ளிட்ட மூன்று நிர்வாகிகள் மட்டும் ஆஜராகினர். அவர்களிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. சிவசங்கர் பாபா நெஞ்சுவலி காரணமாக, உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டதாக, குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments