சுங்கச்சாவடியில் நின்றுக்கொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்து எரிந்த லாரி

0 2923

ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்திலுள்ள சுங்கச்சாவடியில் நின்றுக்கொண்டிருந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்த காட்சிகள் வெளியாகியுள்ளன.

விஜயவாடாவிலிருந்து குண்டூருக்கு காலி டீசல் டேங்கரை ஏற்றிச்சென்ற லாரியானது, கட்டணம் செலுத்துவதற்காக சுங்கச்சாவடியில் நின்றுக்கொண்டிருந்தது. அப்போது லாரியின் டயர் திடீரென வெடித்து தீப்பிடிக்க தொடங்கியது.

தகவலறிந்து நிகழ்விடத்திற்குவந்த தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரப்போராட்டத்துக்கு பின் தீயை அணைத்தனர். இதில் லாரி முற்றிலுமாக எரிந்த நிலையில், சுங்கச்சாவடியின் 2 கவுண்டர்கள் தீயில் கருகி சேதமடைந்தன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments