கொரோனா பலிகளுக்கு நிவாரண நிதி வழங்கப்படும் என்பது புரளி - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 5292

கொரோனாவில் உயிரிழப்பவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்கப்படும் என்பது புரளி என தெரிவித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் புரளியை பரப்புவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை அரும்பாக்கம் அரசினர் அறிஞர் அண்ணா மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவத்திற்கான ஒருங்கிணைந்த கட்டளை மையத்தை அவர் திறந்து வைத்த அவர், தமிழகத்தில் 54 சித்தா கொரோனா சிகிச்சை மையங்கள் உள்ளன என்றார்.

ஓமந்தூரார் மருத்துவமனை தலைமை செயலகமாக மாற்றப்படுகிறது என ஓ.பன்னீர்செல்வம் வைத்த குற்றச்சாட்டிற்கும் பதிலளித்த அவர், தேர்தல் அறிக்கையில் கூறியதன் அடிப்படையில்தான் கிண்டியில் புதிய பன்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments