வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவானது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி..! அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெறக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகரக் கூடும்.
இதன் காரணமாக பெரும்பாலான கிழக்கு இந்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய இந்தியப் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு பகுதிகளில் அதி கனமழை பெய்யக்கூடும்.
ஒடிசா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியில், அதி கனமழை பெய்யக்கூடும். வங்ககடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க வங்க கடலுக்குள் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வடமேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால், தமிழக பகுதிகளில் மழை கிடைக்க வாய்ப்பு இல்லை.
Comments