கோவளம் அருகே ஆழ்கடலில் பைபர் படகு மூழ்கி 8 மணி நேரம் உயிருக்கு போராடிய 5 மீனவர்கள் பத்திரமாக மீட்பு..!

0 3234

காஞ்சிபுரம் மாவட்டம், கோவளம் அருகே ஆழ்கடலில் பைபர் படகு மூழ்கியதால் 8 மணி நேரம் கடலில் உயிருக்கு போராடிய 5 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

சென்னை புதுவண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெருவை சேர்ந்த தேசம் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் காசிமேட்டை சேர்ந்த ஐந்து மீனவர்கள் கோவளம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். அப்போது, திடீரென நள்ளிரவில் கடல் சீற்றம் அதிகரித்ததால், எதிர்பாராமல் பைபர் படகு கடலில் மூழ்கியதால், மீனவர்கள் கடலில் குதித்து ஐஸ் பாக்ஸ் மூடியை பிடித்து 8 மணி நேரம் உயிருக்கு போராடி உள்ளனர்.

அதிகாலையில் மீன்பிடிக்க சென்ற கோவளம் மீனவர்கள், அவர்களை பார்த்து கரைக்கு அழைத்து வந்தனர். பின்னர், ஆர் கே நகர், எம்எல்ஏ எபினேசரிடம் முறையிட்டதையடுத்து 4 விசைப்படகுகளில் சென்று 5 மீனவர்களையும் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments