"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
பூரி ஜெகந்நாதர் ரதயாத்திரை இந்தாண்டும் பக்தர்களின்றி நடைபெறும் என அறிவிப்பு..!
ஒடிசாவின் பூரி ஜெகநாதர் ரத யாத்திரையில் இந்த ஆண்டும் பக்தர்கள் கலந்து கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பேசிய ஓடிசா மாநில சிறப்பு நிவாரண ஆணையர், மாநிலத்தின் பிற பகுதிகளிலும் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது என்றார்.
ரத யாத்திரையின்போது பூரியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கும் எனக்கூறிய அவர், கடந்த ஆண்டைப்போல மக்கள் தொலைக்காட்சியில் இதனை நேரலையாக பார்த்து மகிழலாம் என தெரிவித்தார்.
பூரி ஜெகநாதர் ரத யாத்திரை அடுத்த மாதம் 12ந்தேதி நடைபெறுகிறது. கடந்த ஆண்டு கொரோனாவின் முதல் அலை காரணமாக இந்த ரத யாத்திரை பக்தர்கள் இன்றி நடைபெற்றது.
Comments