ஆன்லைனில் ஆதார் அட்டையில் முகவரியை மாற்றும் வசதி..! வாடகை வீட்டில் வசிப்போரின் சிக்கலைத் தீர்க்க நடவடிக்கை

0 13616
ஆன்லைனில் ஆதார் அட்டையில் முகவரியை மாற்றும் வசதி..! வாடகை வீட்டில் வசிப்போரின் சிக்கலைத் தீர்க்க நடவடிக்கை

வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு ஆன்லைன் மூலம் முகவரி விவரத்தை மாற்றுவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு அடிக்கடி வீட்டை மாற்றுவதற்கான தேவை பலருக்கு ஏற்படுகின்றது. அதில் மீண்டும் மீண்டும் ஆதார் அட்டையில் உள்ள முகவரியை மாற்றுவது அவர்களுக்கு சிரமமாக உள்ளது.

ஆதார் அட்டையில் கொடுக்கப்பட்டுள்ள பெயர், பிறந்த தேதி போன்ற பல தகவல்களை ஆன்லைனில் மாற்றலாம். ஆனால் முகவரியை மாற்றுவதில் சிக்கல் உள்ளது. வாடகை வீடுகளில் இருப்பவர்களின் இந்த சிக்கலைக் கருத்தில் கொண்டு, ஆதார் அட்டையை விநியோகிக்கும் தனிநபர் தகவல் ஆணையம் ஒரு சிறப்பு வசதியை வழங்கியுள்ளது.

இதன் மூலம் மக்கள் இப்போது வீட்டில் இருந்தபடியே தங்கள் முகவரியைப் புதுப்பிக்க முடியும். முன்னர் ஆதார் அட்டையில் நிரந்தர முகவரியை மாற்ற மக்கள் ஆதார் மையத்திற்கு செல்ல வேண்டியிருந்தது.

இங்கே அவர்கள் அனைத்து துணை ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. ஆனால் இப்போது இந்த வேலையை வீட்டிலிருந்து ஆன்லைனில் செய்யலாம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments