காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் வழக்கறிஞரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

0 2567

சென்னை சேத்துப்பட்டில் ஊரடங்கு விதிகளை மீறி வெளியில் வந்த பெண் மற்றும் அவருக்கு ஆதரவாக காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவரது தாயாரான பெண் வழக்கறிஞர் தனுஜா ராஜன் ஆகியோரின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மக்களை காக்கும் பணியிலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தும் பணியிலும் ஈடுபட்டுள்ள காவல் துறையினரிடம் இதுபோல நடந்துகொள்ளக்கூடாது என அறிவுறுத்தினார்.

இதுபோன்ற ஒரு சம்பவத்தில் முன் ஜாமீன் வழங்கினால் தவறான முன்னுதாரணமாகிவிடும் என்பதாலும், வழக்கறிஞரின் செயல்பாடு சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதாலும் முன் ஜாமீன் வழங்க முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments